கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ்.இ வகை கொரோனாவா..?

 
Mumbai-case-not-XE-coronavirus-variant

எக்ஸ்.இ வகை கொரோனா ஒமைக்ரானைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.

உலகையே மிரட்டிய கொரோனா தொற்று இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற கேரள மாணவிகள், அங்கு கொரோனா பரவ தொடங்கியதும் ஊர் திரும்பினர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த பாதிப்பு அதிகரித்து நாடு முழுவதும் பரவியது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அலை வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் தொற்று பாதிப்பு பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒமைக்ரானைவிட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்ட எக்ஸ்.இ வகை கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது. ஆனால், இதன் பாதிப்பு வீரியத்தின் தன்மை அச்சப்படும் இல்லை என்றே மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம்  கண்டறியப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து ராஜீவ்காந்தி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த தொற்று கொரோனா எக்ஸ்.இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார். எனினும் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எக்ஸ்.இ வகை கொரோனா பாதித்த வாலிபர் குணம் அடைந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

From around the web