சீரியல் பிக்னி திருடன்... வீடு வீடாகச் சென்று திருடும் மர்ம நபர்!!

 
MP

மத்திய பிரதேசத்தில் பெண்கள் உள்ளாடைகளை மட்டும் காணாமல் போவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரின் கிலா கேட் காவல் நிலையப் பகுதிக்கு அருகில் உள்ள கோஸ்புராவில் இருந்து பெண் ஒருவரின் உள்ளாடைகளைத் திருடுவதற்காக ஒரு இளைஞன் வீட்டின் கூரையில் ஏறுவதைக் காட்டுகிறது.

அந்த இளைஞன் குழாயின் உதவியுடன் வீட்டின் கூரையில் ஏறி உலர்த்துவதற்காக கயிற்றில் தொங்கிய பெண்களின் உள்ளாடைகளை திருடுவது வழக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொஸ்புரா பகுதியில் உள்ள எண்.3 வீதியில் உள்ள 6 வீடுகளில் பெண்களின் உள்ளாடைகளை திருடன் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

bikini

இந்த பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் ஆடைகள் காணாமல் போகும் சம்பவங்கள் நீண்ட நாட்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் அவமானம் காரணமாகவோ, ஆதாரம் இல்லாத காரணத்தினாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தற்போது தொழிலதிபர் பகத் சிங்கின் வீட்டில் உள்ளாடைகளைத் திருடிய அவரது செயல் கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் அந்த இளைஞர் முதலில் ஒரு வீட்டை கடந்து சென்றுவிட்டு திரும்பி வந்து வீட்டின் சுவரில் ஏறி கயிற்றில் தொங்கிய துணிகளை திருடி தப்பி செல்வதை காணமுடிகிறது. இப்போது, ​​நேகா என்ற பெண் குவாலியர் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார்.


இந்த புகாரை அடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிந்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கெளஸ்புரா பகுதி பெண்கள் பலரும் சைக்கோ கொலைகாரனாக இருக்குமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துப் போயிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

From around the web