மத்திய பிரதேசத்தின் அவலம்!! சிறுமியை தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றிய மருத்துவ பணியாளர்கள்!!

 
MP

மத்திய பிரதேசத்தில் சிறுமியை தரையில் உட்கார வைத்து ரத்தம் ஏற்றப்படும் நிலையில் தாய் ரத்த பாக்கெட்டை கையில் பிடித்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, சட்னா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி சந்தோஷிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் அவளை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

Blood-pack

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ரத்தம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அங்குள்ள வார்டுக்கு சென்ற போது, படுக்கை எதுவும் காலியாக இல்லை.

இதையடுத்து, மருத்துவ உதவியாளர்கள், சிறுமியை அங்குள்ள வராண்டாவின் ஓரத்தில் உட்கார வைத்து ரத்தம் செலுத்தினர். ரத்தம் இருந்த பையை சிறுமியின் தாயிடம் கொடுத்து உயர்த்தி பிடிக்கச் செய்தனர். அந்த தாயும் கைவலிக்க ரத்தப் பையை உயர்த்திப் பிடித்தபடி வெகு நேரம் நின்று கொண்டிருந்தார். இதை அங்கிருந்த சிலர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.


இதையடுத்து, சட்னா மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா உத்தரவுப்படி மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக், மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மருத்துவமனையின் டாக்டர் பிரதீப் நிகம், நர்ஸ் அஞ்சு சிங் ஆகியோருக்கு சம்பள உயர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.

From around the web