மனைவி கொன்று புதைத்து.. காணாமல் போனதாக நாடகம்... ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு சிக்கிய கணவன்!!

 
kerala

கேரளாவில் மனைவியை கொலை செய்து அவர் காணாமல் போனதாக ஒரு வருடமாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வருபவர் சஜீவன் (45). இவரது மனைவி ரம்யா(35). இவரக்ளுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மகழ்ச்சியாக சென்ற இவர்கள் திருமண வாழ்க்கையில் சமீபத்தில் மனைவியின் நடத்தையில் சஜீவனுக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் சண்டை நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16-ம் தேதி இருவருக்கும் இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சஜீவன் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பின்னர் வீட்டின் முன் மனைவியின் உடலை புதைத்துள்ளார்.

Murder

தன்னுடைய அம்மாவைத் தேடிய குழந்தைகளிடம், ‘அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார். அதை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என்பதால், பெங்களூருக்குப் படிக்கப்போயிருப்பதாக வெளியில் சொல்ல வேண்டும்’ எனவும் கூறி பிள்ளைகளை நம்ப வைத்திருக்கிறார். இந்த நிலையில், ரம்யா எங்கே? என அவரின் உறவினர்களும் கேட்டிருக்கின்றனர்.

அதற்கு, பியூட்டீஷியன் படித்திருக்கும் ரம்யா பெங்களூருவில் படிக்கப்போனதாகவும், அங்கிருந்து வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் கூறிச் சமாளித்திருக்கிறார். ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆன பின்னரும் ரம்யா யாரிடமும் போனில்கூட பேசவில்லை, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாததால், உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சஜீவனிடம் அவரின் மனைவி பற்றிக் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

arrest

ஆனால் இது குறித்து அவரின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர் இன்னொரு நபருடன் ஓடி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், மனைவி காணாமல் போய்விட்டார் என காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காணாமல் போன பெண்கள் குறித்த விசாரணை மீண்டும் சூடு பிடித்தது. அதன்படி ரம்யா காணாமல் போனது குறித்து அவரது கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், மனைவியை கொலை செய்து வீட்டின் முன்னர் புதைத்ததை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ரம்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் சஜீவனை கைது செய்தனர். இந்த சம்பவம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web