வாட்ச்மேன் வீட்டுக்கு ரூ. 12 லட்சம் மின் கட்டணம்! ஷாக் அடித்த கரண்ட் பில்!!

 
EB

புதுச்சேரியில் மின் துறையின் அலட்சியம் காரணமாக வாட்ச்மேன் வீட்டிற்கு ரூ. 12 லட்சம் மின் கட்டண பில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியில் வசித்து வருபவர் சரவணன் (57). இவர் அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி புரிந்து வருகிறார். வழக்கமாக சரவணன் வீட்டிற்கு மின் கட்டணம் மாதம் ரூ. 800க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங்கில் ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது.

TNEB

கடந்த இரண்டு மாதங்களாக தனியார்மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இரண்டு மாதமாக மீட்டர் ரீடிங் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 என வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்குச் சென்று விவரம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மீட்டர் ரீடிங் செய்யும் போது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்ந்து விட்டதாக அலட்சியமாக தெரிவித்துள்ளனர். கடந்த முறை மீட்டர் 20630 இருந்த மீட்டர் ரீடிங், இந்த முறை 21115 ஆக வந்துள்ளது. ஆனால் மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், 211150 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டதால் சரவணனுக்கு 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என வந்துள்ளது. இதை சரிசெய்து தரப்படும் என, மின் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Puducherry

ஆனாலும் அதனை சரி செய்யாமல் அவரை அலைக்கழித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

From around the web