பெண்ணுடன் வீடியோ கால்... நிர்வாணமாக தோன்றிய எம்.பி!! வைரல் வீடியோ

 
gorantla-madhav

ஆந்திராவில் மக்களவை உறுப்பினர் ஒருவர் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசிவாறு அந்தப் பெண்ணுக்கு அந்தரங்க உறுப்பை காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கோரண்ட்லா மாதவ். இந்துபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரான கோரண்ட்லா மாதவ் எம்.பி, பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசி கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய அந்தரங்க உறுப்பை காண்பிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jagan-gorantla-madhav

இந்நிலையில் இன்று காலை இந்துபுரத்தில் எம்.பி. கோரண்ட்லா மாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தெலுங்கு தேசம் கட்சியினர் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து நான் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்திருக்கிறேன். இந்த வீடியோ தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார் என்று கூறினார்.

ஆந்திர அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிள்ப்பி இருக்கிறது. இந்த வீடியோ ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.


ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அவந்தி ஸ்ரீனிவாஸ், அம்பதி ராம்பாபு பெண்களுடன் ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

From around the web