நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் இரண்டு தலை ஆமை! வைரல் வீடியோ

ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் நேற்று அரியவகை இரண்டு தலை ஆமை பிறந்ததுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் 400 ஹெக்டேர் பரப்பளவில் நந்தன்கனன் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. 1960-ல் நிறுவப்பட்ட இந்த பூங்கா, 1979 ஆம் ஆண்டு பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.இந்த நிலையில் நந்தன்கனன் பூங்காவில் உள்ள ஊர்வன பூங்காவில் நேற்று அரியவகை இரண்டு தலை ஆமை பிறந்தது.
இதுகுறித்து நந்தன்கனன் விலங்கியல் பூங்காவின் துணை இயக்குநர் சஞ்சீத் குமார் கூறுகையில், சிவப்பு காது ஸ்லைடர் இனத்தைச் சேர்ந்த ஆமை இரண்டு ஆமைக்குட்டிகளை ஈன்றுள்ளது. குஞ்சுகளில் ஒன்று சாதாரணமாக இருந்தாலும், மற்றொன்றுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது ஒரு அரிதான சம்பவம் என்றும், மரபணுக் கோளாறால் ஏற்பட்ட பாதிப்பு என்றும் அவர் கூறினார்.
மேலும் இதுபோன்ற சவாலை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம். விலங்கியல் பூங்காவின் கண்காணிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள், குஞ்சுகளின் உயிரைக் காப்பாற்ற இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஊர்வன பூங்காவில் உள்ள பெட்டியில் ஆமை குட்டி வைக்கப்பட்டுள்ளது. குஞ்சு பொரிப்பதற்கு ஏற்ற சூழலை வழங்க முயற்சிக்கிறோம் என்று கூறினார்.