சீர்காழி அருகே நேருக்குநேர் மோதிக் கொண்ட இரண்டு அரசு பேருந்து!! 18 பேர் படுகாயம்

 
sirkali

சீர்காழி அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து புறவழிச்சாலையில் பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தும், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

accident

விபத்துக்குள்ளான பகுதியில், நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் சாலை குறுகியதாக உள்ளது. மேலும் அங்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த குறுகிய சாலையில், எதிரெதிர் திசையில் வந்த இரு பேருந்துகளும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டப் போது நேருக்கு நேர் மோதி விபத்து விபத்துக்குள்ளானது.

இதில் புதுச்சேரியில் இருந்து வந்த புதுச்சேரி அரசு பேருந்தின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. மேலும் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள்,‌ பயணிகள் என மொத்தம் 18 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.‌

Sirkali-GH

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் நேரில் சென்று சிகிச்சையில் உள்ளவர்களை விபத்து குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

From around the web