முகத்தில் மயக்க மருந்து தெளித்து வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சி..!

 
Trying-to-rob-the-house-by-spraying-anesthetic-on-face

கர்நாடகா மாநிலம், தீர்த்தஹள்ளி தாலுக்கா, நெரட்டூரு அருகே ஓரணி என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று மாலை சோலார் விளக்குகள் பழுது பார்ப்பவர்கள் எனக் கூறிக்கொண்டு பொலிரோ ஜீப் வாகனத்தில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர்.

அங்கு வசித்து வரும் ஸ்ரீநாத் என்பவர் தனி வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் தங்களை சோலார் விளக்குகள் பழுது பார்ப்பவர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

அப்போது வீட்டிற்க்குள் சென்று கொள்ளையடிக்க முயன்ற போது வீட்டில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் கொண்டு வந்த மயக்க மருந்தை வீட்டில் இருந்தவர்களின் முகத்தில் அடித்துள்ளனர்.

அப்போது அவர்கள் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஜீப்பில் வந்தவர்கள் யார் என்று வெளியே வந்த பார்த்த போது சினிமா மாதிரி கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பெரும் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. வந்தவர்கள் அனைவரும் 25 வயது முதல் 30 வயது இருக்கலாம் என்றும் வாகனத்தின் நம்பர் பிளேட் சாணியால் பூசி மறைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா நேற்று அவரது வீட்டிற்குச் சென்று நடந்தவைகளை கேட்டறிந்தார். கொள்ளையர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை செய்யப்பட்டு போவதாகவும். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வீட்டினருக்கு தைரியம் கூறி வந்து உள்ளார். தீர்த்தஹள்ளி கிராமப்புற போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web