பாலியில் தொல்லை.. ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி..!! அதிர்ச்சி வீடியோ

 
Maharastra

மகாராஷ்டிராவில் வேகமாக சென்ற ஆட்டோவில் இருந்து சிறுமி ஒருவர் குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் தன்னை மானபங்கம் செய்ய முயன்றதாகவும், அவரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் சையத் அக்பர் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், தலையில் படுகாயம் அடைந்த சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

auto

இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுமி ஆட்டோவில் இருந்து குதித்தவுடன் உதவிக்கு பலர் ஓடிய காட்சிகள் காணப்பட்டன. சாலையில் கிடந்த சிறுமிக்கு உதவ மற்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவுரங்காபாத் கிராந்தி சௌக் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்பத் தரடே கூறுகையில், “மைனர் மாணவி உஸ்மான்புரா பகுதியில் இருந்து ஆட்டோ ரிக்‌ஷாவில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​ஓட்டுனர் சிறுமியை ஆபாசமாகப் பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு தனக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்ட சிறுமி, அவுரங்காபாத் சில்லி கானா வளாகம் வெளியே குதித்துள்ளார். ஓடும் ஆட்டோவில், சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

From around the web