திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா!!

 
ExCM-Biplab-Deb
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் தேப் குமார் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்து இருக்கிறார்.

2018 சட்டமன்ற தேர்தலில், 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து, பிப்லப் குமார் தேப் புதிய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவியேற்றதிலிருந்து பல சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.

இவர் ஆட்சிப்பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் நிறைவு செய்து, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத தேர்தலுக்கு தயாராகி வந்த நிலையில், இவருக்கும் மாநில பாஜக மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதன் காரணமாக பலர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் தேசிய தலைமையின் அதிருப்திக்கும் ஆளானார்.

இவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும், சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவிக்கும் கருத்துக்களால் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் தேசிய தலைமையிடம் புகார்கள் சென்றன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான அமித்ஷாவை பிப்லப் குமார் தேப் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து, இன்று தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார்.

From around the web