அதிகாலையில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்.. அலறிய பயணிகள்.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

 
Rajasthan

ராஜஸ்தானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணிக்கு பாந்த்ரா டெர்மினஸ் - ஜோத்பூர் சூர்யநகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. ராஜ்கியாவாஸ் - போமத்ரா பகுதிகளுக்கு இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Rajasthan

தகவல் அறிந்து உடனடியாக ஆம்புலன்ஸுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் நல்லவாய்பாக யாரும் உயிரிழக்கவில்லை. ரயில்வே அதிகாரிகள், தடம் புரண்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி கூறுகையில், “ரயில் தடம் புரண்டதில் 11 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் நிலை குறித்து குடும்பத்தினர் அறிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.


இந்த விபத்து குறித்து ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் கூறுகையில், “மார்வார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் ரயில் பெட்டிகளுக்கு உள்ளே அதிர்வு சத்தங்கள் கேட்டன. அடுத்த சில நிமிடங்களில் ரயில் நிறுத்தப்பட்டது. நாங்கள் கீழே இறங்கி பார்த்தபோது படுக்கை வசதி கொண்ட 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு காணப்பட்டன. அடுத்த 15- 20 நிமிடங்களில் ஆம்புலன்ஸுகள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று கூறினார்.

From around the web