படகு போட்டியில் விபரீதம்! கேரளாவில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி!

 
Kerala

கேரளாவில் பாம்புப்படகு ஒன்று கவிழ்ந்ததில் அதிலிருந்த 3 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் சென்னிதலா பகுதியில் அச்சன்கோவில் ஆற்றில் படகுப் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த பாம்புப்படகு ஒன்று கவிழ்ந்ததில் அதிலிருந்த 12-ம் வகுப்பு மாணவர் ஆதித்யன் மற்றும் வினீஷ் (37) ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள பம்பை ஆற்றில் ஆரன்முலா உத்திரட்டாதி படகுப் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஆரன்முளா உத்திரட்டாதி படகுப் போட்டியில் பங்கேற்க ‘பள்ளியோடம்’ (பாம்புப் படகு) அச்சன்கோவில் ஆற்றில் தயார் நிலையில் இருந்தது.

Kerala

அந்த படகு ஆரன்முலா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வலியபெரும்புழ கடவுக்கு அருகில் எதிர்பாராதவிதமாக காலை 8.30 மணியளவில் படகு கவிழ்ந்தது. படகு கவிழ்ந்தபோது அதில் சுமார் 50 பேர் இருந்தனர். பலரும் நீந்தி கரை சேர்ந்துவிட்டனர்.

நான்கு பேர் மட்டும் காணாமல் போயினர். 4 பேரில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒருவர் நீந்தி கரை சேர்ந்துவிட்டார். ஆற்றில் மூழ்கிய ஒருவரை தேடும் பணி நடைபெற்றது. வேகமாக வீசிய காற்றின் காரணமாக படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய மூன்றாவது நபரின் சடலம்  இன்று கண்டெடுக்கப்பட்டது. சென்னிதலாவை சேர்ந்த ராகேஷ் என்பவரின் சடலம் படகு கவிழ்ந்த இடத்தில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் பெரிய பெரும்புழா பாலம் அருகே சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web