காரைக்காலில் சோகம்! கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாப பலி!!

 
karaikal

கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்ந சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இந்த தம்பதியரின் மூத்த மகள் சலேத் நிதிக்ஷனா (14). இவா் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தாா். இவருக்கு தசை சுருக்க நோய் உள்ளதாகவும், மெதுவாக நடந்து செல்லக்கூடியவா் என்றும் கூறப்படுறது.

rat

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 11) பிற்பகல் சலேத் நிதிக்ஷனா வாந்தி எடுத்துள்ளாா். இதுகுறித்து அவரது தாயாா் ஸ்டெல்லா மேரி கேட்டபோது, ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த கேக்கை சாப்பிட்டதாக கூறினாராம்.

அது எலி விஷம் என கூறிய ஸ்டெல்லா மேரி, மகளை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சலேத் நிதிக்ஷனா நேற்று பரிதாபமாக உயிரிழந்தாா்.

Karaikal

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்ந சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web