பீகாரில் சோகம்!! சாலையோர கோயிலில் வழிபாடு.. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி விபத்து - 12 பக்தர்கள் பலி! 

 
Bihar

பீகாரில் மத ஊர்வலத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் தேஸ்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நயா காவ்ன் தோலா கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கிராமம் ஹாஜிபூர்-மஹ்னார் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

Bihar

முன்னதாக கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்த போது, ​​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் ராஷ்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ முகேஷ் ரூஷன் கூறுகையில், “இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார். 

Bihar

இந்த நிலையில், விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டரில், “பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளது. 

From around the web