பீகாரில் ரயில் எஞ்சின் திருட்டு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

 
Bihar

பீகாரில் ரயில் எஞ்சினையே ஒரு கும்பல் திருடிய சம்பவம் போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளயாகி உள்ளது.

பீகார் மாநிலத்தில் வறுமை காரணமாக அம்மாநில மக்கள் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். உடம்பு வளைந்து வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் அங்கேயே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள். அப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கூறிய வாக்கு மூலத்தைக் கேட்டு போலீசார் ஆடிப்போயுள்ளனர்.

Bihar

விசாரணையில், பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக அந்தக் கும்பல் கழற்றி திருடிச் சென்றுள்ளது. ரயில் நிலையத்தின் அருகில் பயன்பாடற்ற சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது. அதன் வழியாக திருடி சென்று, முசாபர் நகரில் உள்ள ஒரு காயலான் கடையில் விற்றிருக்கிறார்கள். அவர்களை அழைத்துச்சென்று ரயில் எஞ்சினின் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர்.

இதே போன்று மற்றொரு ருசிகரமான சம்பவம் பீகாரில் உள்ள புர்னியா மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ரயில் நிலையத்தில் ஒரு பழமையான நீராவி ரயில் எஞ்சின் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த எஞ்சினை போலியான கடிதம் மற்றும் ஆவணங்கள் மூலம் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார் அதே ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே எஞ்சினியர் ஒருவர். 

Bihar

இதற்கு ஒருபடி மேல் போய் இன்னொரு கும்பல், ராணிகஞ்ச் மாவட்டத்தில் பால்டானியா என்ற ரயில்வே பாலம் கடந்த 45 ஆண்டுகளுாக இருக்கிறது. 500 டன் இரும்பு பொருட்களால் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் இருந்து தான் இரும்பு பொருட்களை கொள்ளையடித்திருக்கிறது. அதுவும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகல் வேளையிலேயே பாலத்தை ரிப்பேர் பார்ப்பது போல பக்காவாக நாடகமாடி இரும்பு பொருட்களை கொள்ளையடித்து இருக்கிறார்கள். 

From around the web