பாம்பு கடித்து இளைஞர் பரிதாபமாக பலி.. செல்ஃபி எடுக்க முயன்றபோது பரிதாபம்!!

 
Jagadesh

ஆந்திராவில் 24 வயது இளைஞர் பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ் (24). இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் அரட்டையடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக பாம்புகளை கொண்டு வித்தை காட்டுபவர் சென்றுள்ளார்.   

snake bite

அவரை வழிமறித்த ஜெகதீஷ், பாம்புகளை காட்டுமாறு கூறியதாக கூறப்படுகிறது. பாம்பாட்டியிடம் இருந்து நாகப்பாம்பை வாங்கிய ஜெகதீஷ், ஆபத்தை உணராமல், அதனுடன் சேர்ந்து வித்தை காட்ட முயன்றதாக தெரிகிறது. தன் தோள் மீது பாம்பை வைத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஜெகதீஷ் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தோள் மீது நாகப்பாம்பை ஜெகதீஷ் வைக்க முயன்றபோது, அவரது கைப் பகுதியில் பாம்பு தீண்டியது. பாம்பு தீண்டியதால் பதற்றத்திற்குள்ளான ஜெகதீசை அருகில் இருந்த அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

dead-body

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெகதீஷ் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபரீத விளையாட்டால் இளைஞர் வீணாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web