சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமியை தூக்கியடித்த இளைஞர்!! பதைபதைக்கும் வீடியோ!!

 
Kerala

கேரளாவில் சாலையில் சும்மா நின்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் கீழே தூக்கி போட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை உருவாக்கியுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு அடுத்து உள்ள மஞ்சேஷ்வர் பகுதியில் இஸ்லாமியர்களின் மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 8 வயது இஸ்லாமிய சிறுமி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது மாமா அழைத்து செல்வார் என்று காத்துக்கொண்டிருந்தார்.

Kerala

அப்போது அங்கு வந்த உடல் பருமனாக இருக்கும் மர்ம நபர் ஒருவர் சிறுமி அருகே சென்றுள்ளார். பிறகு சிறுமியை தனது இரு கைகளை கொண்டு தூக்கி அதே ரோட்டில் சட்டென்று போட்டுவிட்டு சென்றுள்ளார். இதில் நிலைகுலைந்து போன சிறுமி, சாலையோரமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த சிறுமியின் மாமா, சிறுமியிடம் அழுதுகொண்டிருப்பதற்கான காரணத்தை குறித்து கேட்டுள்ளார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்தவை குறித்து கூறி அழுதுள்ளார். பின்னர் இது தொடர்பாக அந்த பகுதி சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, அதில் அந்த மர்ம நபர் முகம் பதிவாகியிருந்தது.


தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி, போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web