உற்சாகமாக நடனமாடிய இளம்பெண் மயங்கி விழுந்து பலி!! திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்!

 
Karnataka

கர்நாடகாவில் திருமண வரவேற்பில் நடனம் ஆடிக்கொண்டே வந்த இளம்பெண் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ் (23). இவர், உடுப்பி மாவட்டம் பிரம்மவர் தாலுக்கா, கோலலகிரி அருகே உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். 

dead-body

இந்நிலையில் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதே சமயம் இறப்பிற்கான காரணம் என்று பார்க்கும் போது மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரம்மாவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இதுதொடார்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜோஸ்னாவுக்கு எந்த நோயும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். சமீப நாட்களில், குறிப்பாக கொரோனாவுக்குப் பிறகு, ஆரோக்கியமானவர்கள் கூட திடீரென சரிந்து இறந்து போவதாக நாடு முழுவதும் தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

From around the web