இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு செருப்பு மாலை அணிவித்த மனைவி!! வைரல் வீடியோ

 
Telangana

தெலங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவரை, மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மனைவி, அவருக்கு செருப்பு மாலையும் அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாந்தனி அடுத்த ஸ்வர்ணபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்த்க்கு ரூ.20 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Telangana

இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில், ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர், ஸ்ரீகாந்த் வாரங்கலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இது குறித்து அறிந்த அகிலா, தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்த்தை ஹன்மகொண்டாவில் இருந்து ஸ்வர்ணபள்ளிக்கு நேற்று அழைத்து வந்தனர். பின்னர், ஸ்ரீகாந்த்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்துள்ளார். அப்பொழுதும் ஆத்திரம் தீராத அவர், செருப்பு மாலையை ஸ்ரீகாந்திற்கு அணிவித்தார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web