வகுப்பறையிலேயே மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியை!! அதிர்ச்சி வீடியோ

 
UP-Massage

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய வைத்த அரசு பள்ளி ஆசிரியை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் பணி என்பது, அபரிமிதமான சக்தி வாய்ந்த பணி. அத்தகைய பணியை வெட்கித் தலை குனியும்படி, ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் செயலே மற்ற ஆசிரியர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.

UP-Massage

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் போகாரி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் உதவி ஆசிரியையாக ஊர்மிளா சிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில்,  தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடச் கூறுகிறார். இதையடுத்து அந்த மாணவன், நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு மசாஜ் செய்கிறார். அப்போது, வகுப்பறையில் மற்ற மாணவ - மாணவியரும் அமர்ந்து உள்ளனர். இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி மீதும், நிர்வாகத்தின் மீதும் திருப்தி அடைந்துள்ளனர்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து, ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் கூறுகையில், "இந்த காணொளியை சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் வெளிச்சத்திற்கு வந்தது என தெரிவித்தார்.

From around the web