குழந்தையை 4வது மாடியில் இருந்து வீசி கொன்ற தாய்... பதற வைக்கும் வீடியோ

 
bengaluru

கர்நாடகாவில் 4-வது மாடியில் இருந்து சிறுமியை கீழே தூக்கி வீசி கொன்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சம்பங்கிராம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரண். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவருக்கு சுஷ்மா என்ற மனைவியும் துருதி (5) என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி பல் டாக்டராக கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார்.

sushma

இந்த நிலையில் துருதி மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று தெரிகிறது. மேலும் துருதிக்கு பேச்சு வராது என்றும் கூறப்படுகிறது. இதனால் துருதியை, சுஷ்மா தான் கவனித்து வந்து உள்ளார். துருதியை கவனித்து வந்ததால் சுஷ்மாவால் தனது பயிற்சியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுஷ்மா, நேற்று முன்தினம் மதியம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4-வது மாடிக்கு துருதியை அழைத்து சென்று அங்கிருந்து துருதியை தூக்கி கீழே வீசினார்.

பின்னர் சுஷ்மாவும் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் சுஷ்மாவை மீட்டனர். மேலும் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த துருதி பரிதாபமாக உயிரிழந்தாள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்பங்கிராம்நகர் போலீசார் துருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், துருதியை கவனித்து கொள்ள முடியாததால் அவளை 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசி சுஷ்மா கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து சம்பங்கிராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்தனர். இதற்கிடையே துருதியை மாடியில் இருந்து சுஷ்மா தூக்கி வீசும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருதியை கவனிக்க முடியாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் கொண்டு சென்று சுஷ்மா விட்டுவிட்டு வீ்ட்டிற்கு வந்தார். பின்னர் துருதியை, அவளது தந்தை மீட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web