பச்சிளம் பெண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய்!! உயிருடன் மீட்பு

 
gujarat

குஜராத்தில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தில் வசித்து வருபவர் கோகிலாபென். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனால் குழந்தையின் அழுகை சத்தம் கேட்கும் இடத்தை தேடி சென்றுள்ளார். 

baby

அங்கு சென்று அவர் பார்த்த போது, மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அங்கு வந்த ஊழியர்கள் அழுகை சத்தம் கேட்கும் இடத்தை தோண்டினர். அதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை புதைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Investigation

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் பெற்றோரையும் தீவிரமாக தேடி வருகின்றர். பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web