விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்.. சங்கர் மிஸ்ரா கைது.. பணியில் இருந்து நீக்கம்!

 
Shankar Mishra

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்க நிறுவனமான வெல்ஸ் பார்கோவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி நோக்கி கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் அளவுக்கு மீறி மது அருந்திய ஒருவர், உச்சக்கட்ட போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக அப்பெண் புகார் அளித்தும் அவர் மீது ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Shankar Mishra

இதையடுத்து, ஏர் இந்தியா குழுமத் தலைவருக்கு அப்பெண் புகார் கடிதம் எழுதவே, இந்த விஷயம் பூதாகரமானது. பின்னர், சம்பந்தப்பட்ட நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பறக்க ஏர் இந்தியா தடை விதித்தது. மேலும், அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது அடையாளத்தையும், புகைப்படத்தையும் வெளியிட்டது.

டெல்லி போலீசார் வெளியிட்ட அடையாளத்தின் படி, அந்த நபர் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (44) என்பதும், அமெரிக்க நிறுவனமான வெல்ஸ் பார்கோவில் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக அவர் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சங்கர் மிஸ்ரா தற்போது தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவர் மும்பையை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக சங்கர் மிஸ்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீசார் பிறப்பித்துள்ளனர்.

Shankar MIshra

நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தநிலையில், பெங்களூருவில் பதுங்கியிருந்த சங்கர் மிஸ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சங்கர் மிஸ்ரா மீது 294 (பொது இடத்தில் ஆபாசமான செயல்), 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பலாத்காரம் செய்தல்), 509 (சொல், சைகை அல்லது செயல் ஆகியவற்றை அவமதிக்கும் நோக்கில் செய்தல்)இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் 510 (குடிபோதையில் இருக்கும் நபர் பொது இடங்களில் தவறாக நடத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெல்ஸ் பார்கோ இந்தியாவின் துணைத் தலைவர் சங்கர் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் 'ஆழ்ந்த கவலையளிக்கிறது' .இந்த நபர் வெல்ஸ் பார்கோவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்தார்.

From around the web