ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவர்... மனைவி பிரிந்த விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

 
Bihar

பீகாரில் மனைவி கோபித்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றதால் கணவர் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மேதாபூரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (25). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோதுமை மண்டியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளன. கிருஷ்ணா விடுமுறைக்காக பஞ்சாப்பில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

private

அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லை. கிருஷ்ணாவுக்கு தனது மனைவி கோபித்துக்கொண்டு மாமியார்  வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. மனைவி பிரிந்து சென்றதை ஜீரணிக்க முடியாமல் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணா ஒருகட்டத்தில் விபரீத முடிவை எடுத்தார்.

தனது வீட்டின் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்ட கிருஷ்ணா கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். கிருஷ்ணாவின் அலறல் சத்தம் கேட்கவே அவரது உறவினர்கள் பதறிப்போய் வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

Bihar

உடனடியாக கிருஷ்ணாவை மீட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், முழுமையாக குணமடைந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

From around the web