மனைவியை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்த கணவன்!! ராஜஸ்தானில் நடந்த கொடூரம்!

 
Rajasthan

ராஜஸ்தானில் பெண் ஒருவரை அவரது கணவர் மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பெண் ஒருவரை மரத்தில் 7 மணிநேரம் வரை கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள், கம்புகளை கொண்டு அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏனெனில், கணவரின் நண்பருடன் அந்த பெண் இருந்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அவரது கணவர், பெண்ணுக்கு தண்டனை கொடுக்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அந்த ஆண் நபருக்கும், இதேபோன்ற தண்டனையை அவர்கள் வழங்கி உள்ளனர். அவரையும் மரத்தில் கட்டி வைத்ததுடன், அந்த கும்பல் கேள்வி கேட்டு கொண்டே அடித்துள்ளது.

Rajasthan

இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பின்பு வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார், நேற்றிரவு தாக்குதல் நடத்தியவர் மீது எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர், 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை குறிப்பிட்டு, ராஜஸ்தானில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீடியோவை ஆய்வு செய்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்த அவர், இந்த அரசிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என ஆளும் காங்கிரஸ் அரசை குறை கூறும் வகையில் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையமும் ராஜஸ்தான் டிஜிபிக்கு கடிதம் எழுதி, குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படி கேட்டு கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறந்த மருத்து சிகிச்சை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

From around the web