கேரளாவில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி! வைரல் வீடியோ

 
Kerala
கேரளாவில் தெருவில் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனை தெரு நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரக்கிணறில் 12 வயதில் நூராஸ் என்ற சிறுவன் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே கிளம்பினான். சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த சிறுவனை அங்கிருந்த தெரு நாய் ஒன்று துரத்தி கண்மூடித்தனமாக கடித்து குதறியது.

Kerala

இதில் சிறுவனுக்கு கை, கால் என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சிறுவன் நாயிடம் போராடி அங்கிருந்து தப்பித்து எழுந்து வீட்டிற்குள் ஓடினான். இதையடுத்து அந்த நாய் சிறுவனை அங்கேய பிழைத்து போ என்ற பாணியில் விட்டுச்சென்றது.

தற்போது படுகாயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தெருநாய்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை வெறி நாய்க்கடிக்கு கடந்த 8 மாதங்களில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர்.

From around the web