ரோடு ரெம்ப குண்டு குழியுமா இருக்கு... என பேட்டியின் போதே பள்ளத்தில் கவிழ்ந்த எலக்ட்ரிக் ரிக்‌ஷா!!

 
UP

சாலையின் நிலைமைகள் குறித்து ஒரு நிருபர் ஒரு பயணியிடம் பேட்டியின் போதே எலக்ட்ரிக் ரிக்‌ஷா பள்ளத்தில் கவிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகள் தேசம் அடைந்துள்ளது. இதனால் சாலைகள் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் பலியா பகுதியில் பல நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அதன்படி பலியா பகுதியைச் சேர்ந்த ப்ரவிர் குமார் என்பவர் குண்டு குழியுமாக இருக்கும் சாலை குறித்து செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போதே அவர் பின்னால் சென்ற எலக்ட்ரிக் ரிக்‌ஷா ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விழுந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

UP

ஒரு பெண் உட்பட ரிக்‌ஷா ஆட்டோவில் வந்தவர்கள் அனைவரும் அந்த பள்ளத்தில் சிக்கினார்கள். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பலரும் பதறியபடி வந்து பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் யாருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.

மோசமான சாலை காரணமாக இதுபோன்று ஒரு நாளைக்கு பலியா பகுதியில் 20 முறை விபத்து நடப்பதாகவும் நான்கு ஆண்டுகளாக இது கண்டுகொள்ளப்படாமலேயே இருப்பதாகவும் ப்ரவிர் குமார் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அதிகாரிகள் சிலர் சாலையை சரி செய்யும் முயற்சியில் இறங்கினர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பியூஷ் ராய் வெளியிட்ட பதிவில், “இன்றைய நிலவரப்படி சாலையின் நிலை அதிகாரிகளால் சில ஒட்டுவேலைகள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் சரியான சாலை என்று அழைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், கர்நாடகாவின் உடுப்பியில் நித்யானந்தா ஒலக்காடு என்ற சமூக சேவகர் தனித்துவமாக சாலைகளில் உள்ள பள்ளங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். அவர் போராட்ட வடிவில் சாலையில் உருண்டு காணப்பட்டார்.

From around the web