வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த மருத்துவர்கள்... அலட்சியதால் பறிபோன உயிர்... உபியில் நேர்ந்த அவலம்!!

 
UP

உத்தரபிரதேசத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ் கேரி கிராமத்தை சேர்ந்தவர் சம்சர் அலி. இவரது மனைவி, வயிற்று வலியால் அவதிப்பட்ட வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பின்னர், வீட்டுக்கு சென்ற சம்சர் அலியின் மனைவிக்கு தொடர்ந்து வயிற்று இருந்துள்ளது. இதனால் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைக்கப்பட்டது தெரிய வந்தது.

Family-planing-operation

பின்னர், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் இருந்த பேண்டேஜ் அகற்றப்பட்டது. எனினும், அந்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web