பயணியை மார்பில் எட்டி உதைத்த நடத்துநர்..! அரசு பேருந்து நடத்துநர் அட்டூழியம்!

 
Karnataka
கர்நாடகாவில் அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் பயணியை காலால் நெஞ்சில் எட்டி உடைத்து கீழே தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடகா மாநிலம் புத்தூர் தாலுகா ஈஸ்வரமங்களா பகுதியில் கே.எஸ்.ஆர்.டி.சி. அரசு பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இதில் ஒரு பேருந்தில் சுப்புராஜ் என்பவர் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.
Karnataka
இந்நிலையில், அரசு பேருந்து நடத்துனர் நேற்று பயணி ஒருவரை தாக்கியுள்ளார். படியில் நின்றபடியே தனது காலால் பயணியின் நெஞ்சில் எட்டி உதைத்து கீழே தள்ளினார்.
இது குறித்து வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நடத்துநர் சுப்புராஜிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
அதில், அந்த பயணி பேருந்தில் ஏறிய போது குடிபோதையில் இருந்துள்ளார். மேலும் பயணி பேருந்தில் ஏறும் போது நடத்துநர் சுப்புராஜ் பயணியை தடுத்து நிறுத்தியதுடன் அவரது குடையை சாலையில் வீசியுள்ளார். இதைத்தொடர்ந்து பயணியையும் சுப்புராஜ் கீழே இறங்கும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிக்கும் சுப்புராஜூக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 
ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய நடத்தநர் சுப்புராஜ், பயணியின் மார்பில் தனது காலைக் கொண்டு எட்டி உதைத்து உதைத்து சாலையில் தள்ளினார். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த புத்தூர் கே.எஸ்.ஆர்.டி.சி. மண்டல் கட்டுப்பாட்டு அலுவலர், ஜெயகர ஷெட்டி, பயணியை தாக்கிய நடத்துனர் சுப்புராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 


 

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பஸ்சில் இருந்தவர் எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த யாருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே சுப்புராஜ் செய்தது தவறு’’ என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நடத்துனர் சுப்புராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதாபிமானமற்ற முறையில் அரசு பேருந்து நடத்துனர், பயணியிடம் நடந்து கொண்ட அநாகரீகமான செயல் பலரால் கண்டிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

From around the web