சாலையை கடந்தவர் மீது மோதிய பைக்..  பைக்கில் வந்த புதுமண தம்பதி மீது ஏறி இறங்கிய லாரி!!

 
Telangana

தெலுங்கானாவில் சாலையை கடந்தவர் மீது மோதிய பைக் சாலையில் சரிந்த போது லாரி ஏறிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சலில் இன்று அதிகாலை ஒருவர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்து இருசக்கர வாகனம் அவர் மீது மோதி இருசக்கர வாகனம் கீழே சரிந்து விழுந்தது. அதன் பின்னால் இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு வந்த லாரி கீழே விழுந்து கிடந்த இருசக்கர வாகனம் மீது ஏறி இறங்கியது.

Telangana

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயர்ந்தனர். மேலும் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரும் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணையில், பைக் மோதி இறந்தவர், சித்திப்பேட்டை மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன் ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல், பைக்கில் பயணம் செய்தவர்கள் புதுமணத் தம்பதிகள் என தெரியவந்தது. ராமயம்பேட்டாவைச் சேர்ந்த சாய்ராஜ், சரிகா ஆகியோர் சொந்த ஊரில் நடந்த விநாயக மூர்த்தி பவனியில் பங்கேற்றுவிட்டு பைக்கில் ஐதராபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web