காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் சுனில் ஜாகர்!!

 
Sunil-Jakhar-resign

பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் கட்சியைவிட்டே விலக முடிவெடுத்த சுனில் ஜாக்கர், இன்று ஃபேஸ்புக் நேரலையில் ‘மன் கி பாத்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, “காங்கிரஸுக்கு குட்பை மற்றும் குட்லக் என கூறி, தனக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கட்சியை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியை நல்ல மனிதர் என்றும், துதிபாடிகளிடம் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இவர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை இருந்தார். நவ்ஜோத் சிங் சித்துவை, காங்கிரசின் மாநில தலைவராக நியமிப்பதற்காக, அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

மூன்று முறை எம்எல்ஏ-வாகவும் ஒருமுறை எம்.பி-யாகவும் இருந்தவர் சுனில் ஜாக்கர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் அதற்கு முன்பாக நடைபெற உள்ள பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இந்நிலையில், சுனில் ஜாக்கரின் விலகல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web