ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு... அடித்து செல்லப்பட்ட அம்மன் கோவில்! வைரல் வீடியோ

 
Andhra

கோதாவரி கரையில் அமைந்திருந்த வனதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக மஹாராஷ்டிரா, அசாம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

Andhra

இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆறு பாயும் 6 மாவட்டங்களில், 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 220-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீதா நகரம் மண்டலத்திற்கு உட்பட்ட புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரம் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதனை தரிசிக்க மக்கள் வருவது உண்டு. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துர்க்கை அம்மன் கோவில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.


இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகிகள், மக்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, அந்த கோவில் சரிந்து, நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

From around the web