கொத்து கொத்தாக செத்து மடியும் தெரு நாய்கள்... கொடூர வைரஸ்... மனிதர்களுக்கு ஆபத்து?

 
kerala

கேரளாவில் நாய்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்றால், கடந்த 3 மாதங்களில் ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள் அதிகளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Dog

ஆய்வில் இதற்கு காரணம் தெருநாய்களிடையே பரவும் கேனைன் டி வைரஸ் என்றும், இந்த வைரஸ், பாதிப்புக்குள்ளான நாய்களிடமிருந்து மற்ற நாய்களுக்கு பரவும் என்றும் கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது என கூறிய அவர்கள், வைரஸ் பாதிப்பால் நாய்கள் மூளை பாதிப்புக்குள்ளாவதோடு, ரேபிஸ் தொற்று போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.

From around the web