கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல்... கலக்கத்தில் சுகாதாரத்துறை!

 
Pigs

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று பரவி உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனியாரம் பகுதியில் கடந்த வாரம் 5 பன்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக  உயிரிழந்தன. இதனால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறையினர் அவற்றின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது உயிரிழந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காயச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pigs

இதனால் கேரள மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அம்மாநில சுகாதாரத்துறை அதிரடியாக திட்டங்களை தீட்டி வருகிறது.

ஆப்பிரிக்க பன்றிக்காயச்சல் மனிதர்களுக்கு தொற்றாது என்று கூறப்படும் போதிலும், பன்றியில் இருந்து மனிதர்கள் மூலமாக மற்ற விலங்களுக்கு பரவும் என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் முதல் முதலாக கடந்த 1920-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது.

pigs

கேரளாவுக்கு முன்பே இதே போன்று கடந்த வாரம் அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலைத் தொடர்ந்து பன்றிகளை வளர்த்து வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

From around the web