பாட்டிக்கு தூக்க மாத்திரை... பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!!

 
Yunis-basha

கர்நாடகாவில் பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா பகுதியைச் சேர்ந்தவர் யூனுஸ் பாஷா (25). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவிக்கு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்து அடிக்கடி பேசினார்.

Sleeping-dose

‘வாட்ஸ் அப்’ வீடியோ காலில் பேச வைத்து, அவரது ஆபாச படங்களை எடுத்து வைத்து கொண்டார். பின் அந்த படங்களை காண்பித்து, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மறுத்தால் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

இதையடுத்து, கடந்த 10-ம் தேதி மாணவியின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நிலையில், பாட்டி வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். இதையறிந்து சென்ற யூசுப், வலுக்கட்டாயமாக துாக்க மாத்திரையை கொடுத்து, பாட்டியின் சாப்பாட்டில் கலக்க வைத்தார். இதை சாப்பிட்டு பாட்டி துாங்கிய பின், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, மதம் மாறினால் திருமணம் செய்து கொள்கிறேன் என யூசுப் கூறியதாக கூறப்படுகிறது. 

arrest

இதையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு மாணவிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவி கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து யூசுப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் யூசுப்பை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த விவகாரம் லவ் ஜிகாத் என புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web