இந்தியாவில் விரைவில் ‘ஸ்கைபஸ்’ அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

 
skybus

இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவில் ‘ஸ்கைபஸ்’ எனப்படும் பறக்கும் பேருந்துகளை தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

‘ஸ்கைபஸ்’ என்பது மெட்ரோ ரயில் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலைப் பயன்படுத்தலாம். இதனால் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் ஸ்கைபஸ் சேவை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

skybus

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இந்த சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவில் எரிபொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாக குறைப்பதே தனது கனவு என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Skybus

முன்னதாக இந்திய அரசாங்கம் 2004-ல் ஸ்கைபஸ் மெட்ரோவின் சோதனைகளை முதன்முதலில் தொடங்கியது, ஆனால் ஒரு ஊழியர் விபத்தில் இறந்ததால் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததால் பின்னர் அது முடிவுக்கு வந்தது குறிப்பிடித்தக்கது.

From around the web