யூடியூபர்களுக்கு ஷாக் நியூஸ்... ரூ. 50 லட்சம் அபராதம்? ஒன்றிய அரசு அதிரடி

 
social media

சமூக வலைத்தளங்களில் புதிய விதிகளை பின்பற்ற மறுத்தால் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போனின் வரவிற்குப் பிறகு மனிதனின் வாழ்வியலில் ஒரு பெரிய மாற்றம் வந்தது உண்மை . ஒரு பொருள் பல வேளை என்பதுபோல் ஒரு போன் அலாரமாக, ரேடியோவாக, டீவியாக, கணினியாக, விளையாட்டு களமாக, இப்படி அதன் பயன்களை அடுக்கி கொன்டே போகலாம். அந்த வகையில், சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் நுகர்வோரின் நலனை பாதுகாக்கவும், தவறான வழிகாட்டும் வகையிலான விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.

youtube

இந்த விதிகளை வெளியிட்டு, நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில், ‘மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் வரம்புக்கு உட்பட்டு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள், முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறாக வழிநடத்த கூடிய விளம்பரங்கள் ஆகியவற்றில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட உள்ளன’ என்றார்.

இந்த விதிகளை மீறி செயல்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் தண்டனை அளிக்கப்படும். இந்த விதிகளின் படி, தயாரிப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அவற்றை ஊக்குவிப்போருக்கு ரூ.10 லட்சம் வரை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் அபராதம் விதிக்க முடியும். குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடைபெற்றால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

Fine

சமூக வலைத்தள பிரபலங்கள் ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள், பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது அது தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். அதாவது சலுகைகள் மற்றும் பெற்ற விருதுகள் ஆகிய விவரங்களை வெளியிட வேண்டும். அதேபோன்று பரிசுகள், ஓட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் நலன் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிடுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவரங்கள் எளிதில் புரியக்கூடிய மற்றும் தெளிவான மொழியில் இடம்பெற வேண்டும். லைவ் நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை பின்பற்ற தவறினால் அந்த விளம்பரங்கள், செய்திகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web