அதிர்ச்சி! காதலியை 35 துண்டுகளாக நறுக்கிய காதலன்... நகர் முழுவதும் வீசிய கொடூரம்!

 
Mumbai

காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக நகர் முழுவதும் காதலன் எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா. இவர் மும்பையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே கால் சென்டரில் பணி புரிந்து வந்த அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு இரு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தது. 
Mumbai
இதையடுத்து டெல்லிக்கு ஓடிய அந்த காதல் ஜோடி, மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. 
கடந்த மே மாதம் அப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார். பின்னர் ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதில் வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து உள்ளார். 
arrest
இந்த நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலைதளங்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்தது, அவரது தந்தை அவரை பார்க்க டெல்லிக்கு வந்தார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளது.

From around the web