அதிர்ச்சி! பிரிட்ஜில் காதலியின் தலை... ரசித்து பார்த்து வந்த கொடூர காதலன்!!

 
Delhi

காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டிய பிறகு துண்டிக்கப்பட்ட தலையை 20 நாட்கள் தினமும் எடுத்து பார்த்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லிக்கு வந்த காதல் ஜோடி, மஹரவுலி தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. 
இதனால் ஆத்திரம் அடைந்த அவன் காதலி ஷ்ரத்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்தான். கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டினான்.
Delhi
இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளால் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும், கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினான். ஒட்டுமொத்தமாக அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளான்.
நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டையும் வீசி எறிந்துள்ளான். தொடர்ச்சியாக 20 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியுள்ளான். அவற்றின் சில துண்டுகளை நாய்கள் கவ்வி சென்றன.
இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "குற்றவாளி அஃப்தாப் அமீன், கிரைம் சீரிஸ், படங்கள் பார்ப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்துள்ளார். எனவே தனது காதலியை கொன்ற பிறகு அவரது உடல் பாகங்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது தொடர்பான கிரைம் சீரிஸ்களையும் பார்த்ததாக தெரிகிறது.
Delhi
பின்னர் அதன்படி அவரது வெட்டப்பட்ட உடல் பாகங்களை பல நாட்களாக பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தி தினந்தோறும் சில சில துண்டுகளை காட்டு பகுதி, மலைப்பகுதி உள்ளிட்டவைகளில் வீசியுள்ளார். மேலும் தனது வீட்டில் எந்த துர்நாற்றமும் வராமல் இருக்க ஊதுபத்தி உள்ளிட்ட வாசனை திரவங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.
காதலியின் உடலை ஒரு நாள் முழுவதும் இருந்து துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அனைத்து துண்டுகளையும் வீசிய பிறகு பல நாட்கள் கழித்தே அவரது தலையை தூக்கி எறிந்துள்ளார். தற்போது அவர் அளித்த தகவலின் பேரில் 13 எலும்பு துண்டுகளை கண்டுபிடித்துள்ளோம்" என்றனர். இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web