அதிர்ச்சி! 17 வயது மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை!

 
Kota

ராஜஸ்தானில் உள்ள விடுதி அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் மஹாவீர் நகர் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரின் தகவலின் படி, தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜேஇஇ மெயின் தேர்வில் தோல்வியடைந்த பின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஜேஇஇ வகுப்புகளுக்குச் செல்லவில்லை. நேற்று அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை இதனால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Suicide

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளான். அவரது அறையை சோதனை செய்த போலீசார் தற்கொலை குறித்து எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மாணவரின் தற்கொலைக்கு காரணம் குறித்து காரணம் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவன் உடலை கைப்பற்றி போலீசார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைத்துள்ளனர். அவரது பெற்றோரின் வருகைக்குப் பிறகே பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police

கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் கோட்டாவில் உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சி மையங்களில் குறைந்தது 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

From around the web