நடுங்க வைக்கும் குளிர்... பள்ளிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி வரை விடுமுறை!!

 
Mist
டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 15-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு நகரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
punjab
டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர் மாநிலங்கள் குளிர் அலை மற்றும் கடுமையான பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக மக்கள் காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலே உண்டாகியுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. தனியார் பள்ளிகள் விடுமுறைக்குப் பின் செயல்பட இருந்தன. எனினும் 2 டிகிரிக்கு குறைவாக எலும்பை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளும் விடுமுறை விட அரசு அறிவுறுத்தியுள்ளது.
Punjab-mist
இதேபோல குளிர் அலை காரணமாக ஜார்கண்ட் மாநிலமும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் சில மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் இடங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கபப்ட்டுள்ளது.

From around the web