தலையணையுடன் உடலுறவு... அதிர வைக்கும் ராகிங் கொடுமை!! வெளியான பகீர் தகவல்

 
Ragging

எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மருத்துவ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் ராகிங் முறையைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருப்பினும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ராகிங் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும் காயப்படுகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள எம்ஜிஎம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மாணியக் குழுவை தொடர்புகொண்டு கல்லூரியில் நடக்கும் ராகிங் கொடுமைகளை பற்றி புகார் கொடுத்துள்ளனர்.

MGM

அதில், “மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர்கள் பலரும் ராகிங் என்ற பெயரில், சக மாணவர்களுடனும், தலையணைகளுடன் உடலுறவு கொள்ளும்படி நடிக்கச் செய்கிறார்கள். மாணவிகளை பற்றி ஆபாசமாக பேச வைப்பது, செல்போன்களை பிடுங்கி வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவும், அடிக்கும் சத்தம் அனைவருக்கும் கேட்கும்படி இருக்க வேண்டும் எனக் கூறுவது போன்ற பல கொடூரங்களை செய்து வருகிறார்கள். இவற்றை பேராசிரியர்களும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பல்கலைக்கழக மாணியக் குழு தரப்பில் இருந்து புகாருக்கு ஆளான கல்லூரியை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. பின்னர் பல்கலைக்கழக மாணியக் குழுவின் ராகிங்கிற்கு எதிரான குழு இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்திருக்கிறது.

Ragging

அதன்படி எஃப்ஐஆர் போடப்பட்டு, எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்து உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களை இந்தூர் போலீசார் அடையாளம் கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் மாணவர்களை அருவருக்கத்தக்க வகையில் ராகிங் செய்த எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மருத்துவ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

From around the web