கொரோனாவால் உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி..!

 
Delhi-government-gives-1-crore

கொரோனாவால் உயிரிழந்த 2 முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவியை டெல்லி அரசு இன்று வழங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா தீயாய் பரவி பல்லாயிரக் கணக்கானோரை பலி வாங்கியது. பலர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிர்பிழைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, நமது நாட்டின் முன்களப் பணியாளர்களாக கருதப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள் என பலரும் தங்கள் உயிரை பற்றிய கவலையின்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றினர்.

அவர்களின் சேவைக்கு இந்த தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, கொரோனா பணியின் போது பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு, டெல்லி அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக 2020-ல் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் உட்பட பல முன்களப் பணியாளர்கள் நிதி உதவியைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மருத்துவமனையில் பணிபுரியும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர் மிதிலேஷ் குமார் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அவரது சேவைகளுக்கு தேசம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கும் என்று கூறினார்.

From around the web