5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
IMD-issues-red-alert-in-five-districts-of-Kerala

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கன மழைப் பெய்யும் என இந்திய வானியல் மையம் எச்சாித்துள்ளது.

நாளை எர்ணாக்குளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காசா்கோடு மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலா்ட் விடப்பட்டுள்ளது.

கேரளா கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதி, மலைப்பகுதி, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

From around the web