இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ராஜீவ் குமார்!!

 
Rajiv-kumar-charges-as-chief-election-commissioner Rajiv-kumar-charges-as-chief-election-commissioner

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வந்த சுசில் சந்திரா பதவிகாலம் நேற்றுடன் (மே 14) முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜீவ் குமார், மிகச்சிறந்த அமைப்பை நடத்துவதை கௌரவமாக கருதுவதாகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் ஆலோசித்து ஒருமித்த கருத்துகளோடு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்காது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையராக செயல்ப்பட்டு வந்த ராஜீவ் குமார், பீகார், மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்தியுள்ளார்.

வரும் 2025 வரை தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்க உள்ள நிலையில், குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன.

From around the web