சிலிண்டர் புக் செய்வதில் சிக்கல்... மக்கள் அவதி!!

 
cylinder

சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்துள்ளது.

இல்லத்தரசிகளின் முக்கிய தேவைகளில் ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர். இந்திய எண்ணெய் நிறுவனம் ஐபிஎம் என்ற முறையில் இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு வினியோகித்து வருகிறது. இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் வினியோகத்தில் கடந்த இரு தினங்களாக கோளாறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து உடனடி சரி செய்யும் நடவடிக்கையில் இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் களத்தில் இறங்கியது.

Gas

இது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் வசதியாக 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Gas

வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புகிறோம். அதன்படி இன்று முதல் வாடிக்கையாளர்களின் அழைப்புகள் வழக்கம் போல் ஏற்றுக் கொள்ளப்படும். திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துகிறோம்” என்று பதில் அளித்துள்ளார்.

இல்லத்தரசிகளின் அடிப்படை தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

From around the web