மீண்டும் விஷவாயு கசிவு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்கள்! மருத்துவமனையில் அனுமதி!

 
Andhra

ஆந்திராவில் வாயுக்கசிவு ஏற்பட்டத்தால் பெண்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் அட்சுடபுரத்தில் பிராண்டிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், நேற்று மாலை திடீரென நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த 50-க்கும் மேற்பட்டோர் உடல்நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

andhra

விஷவாயு தாக்கியதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வாந்தி, குமட்டல், மூச்சுத்திணறல் காரணமாக ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான பெண்களை அனகாப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் அப்பகுதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது, ​​அந்நிறுவனம் அளித்த தகவலின்படி, அனகாப்பள்ளி அரசு மருத்துவமனையில் ஏராளமான பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

andhra

இந்த சம்பவம் குறித்து அறிந்த அனகாப்பள்ளி எஸ்பி கௌதமி ஷாலி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். விதை நிறுவன பெண் ஊழியர்கள் நச்சு வாயுவை சுவாசித்ததால் லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் அனகாப்பள்ளி என்டிஆர் மருத்துவமனை மற்றும் உஷா பிரைம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். விபத்து எப்படி நடந்தது, எங்கிருந்து இந்த நச்சு வாயுக்கள் கசிந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போன்ற நிகழ்வு ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web