நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!! ஜனவரி 31-ம் தேதி தொடக்கம்

 
Parliment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய நிதியமைச்சராக இருப்பவர் இதனை தாக்கல் செய்வார். இதற்கு முன்பு ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதனை ரத்து செய்து ஒரே பட்ஜெட் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

Union-budget

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மொத்த 27 அமர்வுகள் 67 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடரில் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். மேலும். இந்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

Parliment

பிப்ரவரி 14 முதல் மார்ச் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகின்றது. இதன் பிறகு தொடங்கும் கூட்டத் தொடரில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web