பாட்டி வீட்டுக்கு செல்ல அனுமதிக்காத பெற்றோர்கள்... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிறுவன்..!

 
boy-committed-suicide-by-setting-himself-on-fire

பாலக்காடு அருகே பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர்கள் அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து உள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம் பாம்பாடி பகுதியை சேர்ந்த சரத் - சுனிதா தம்பதியின் மகன் மாதவ் (வயது 12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மாணவன் மாதவ் பாட்டி வீட்டுக்கு செல்ல பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு உள்ளார். இதற்கு பெற்றோர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிகின்றது.

இதனால் கோபம் அடைந்த சிறுவன் மாதவ் சமையலறைக்கு சென்று மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அப்போது  அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் மகன் மாதவ் உடம்பில் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுவனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மருத்துவமனையில் 80 சதவீத தீ காயத்துடன் சிறுவன் மாதவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் மாதவு தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதனை அறிந்த பாம்பாடி போலீசார்  சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web